பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆட்சி செய்த அனைவருமே பொறுப்பு! - கம்மன்பில சுட்டிக்காட்டு

Covid-19 China Udaya Gammanpila Lone
By Rakesh Nov 22, 2021 06:29 AM GMT
Report

"நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசோ அல்லது கோவிட் தொற்றோ காரணமில்லை. 1955ஆம் ஆண்டிலிருந்து நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்துக் கட்சிகளுமே இந்த பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பு." என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பணம் இல்லை. டொலர் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றோம்.

அவ்வாறு இல்லாமல் நாட்டில் அவ்வாறான பிரச்சினை இல்லை; தேவையான அளவு பணம் இருப்பதாக நாங்கள் தெரிவித்து வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து எமக்கு வெளியில் வரமுடியாது.

அதனால்தான் கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்தேன். 1955ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் சமர்ப்பித்த அனைத்து வரவு - செலவுத் திட்டங்களும் பற்றாக்குறை வரவு - செலவுத் திட்டங்களே.

எமது வருமானத்தையும் பார்க்கச் செலவு அதிகம். அதனால் பற்றாக்குறையை நிரப்பிக்கொள்ளக் கடன் பெற்றோம். அவ்வாறு பெற்ற கடன்தான் இப்போது பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது.

அதனால் இந்தப் பிரச்சினைக்கு 1955இல் இருந்து ஆட்சி செய்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். எமது அனைத்து தேவைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையே உள்ளது.

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுவதும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை அசைத்துக்கொண்டாடுவதாகும். அதனால் வெளிநாட்டுச் செலாவணி குறைவது என்பது வியப்பானது அல்ல. கோவிட் காரணமாக இந்த பிரச்சினை ஏற்படவில்லை.

2019இல் எமது பொருளாதார அபிவிருத்தி வேகம் 2 வீதத்துக்குக் குறைந்துள்ளது. கடன் வீதம் 87வீதத்தால் அதிகரித்துள்ளது. அதுதான் பொருளாதார வீழ்ச்சிக்கான அடையாளம். இந்தப் பிரச்சினை எப்போதாவது வெடிக்கவே இருந்தது. எனினும், கோவிட் காரணமாக விரைவாக வெடித்திருக்கின்றது.

நாட்டில் இவ்வாறு தேசிய பிரச்சினை இருக்கும்போது நாங்கள் அதற்கு இணைந்து முகங்கொடுக்கவேண்டும். ஆனால், நாங்கள் கட்சி, இன, மத ரீதியாகப் பிரிந்து இருப்பது மாத்திரமல்லாது கோவிட் பிரச்சினைக்கு முகங்கொடுத்து நாட்டைப் பாதுகாப்பது அனைத்து கட்சிகள், இனத்தவர்களின் பொறுப்பு. பாதிக்கப்பட்டிருப்பது எம் அனைவரினதும் நாடாகும்.

எமது நாடு அழிந்தால் நாங்கள் அனைவரும் அழிந்து விடுவோம். அதனால் தொற்று நிலைமையில் தங்களது அரசியலைக் கட்டியெழுப்புவதைவிடத் தொற்று நிலைமையிலிருந்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்றே சிந்திக்கவேண்டும்.

கோவிட்டை பயன்படுத்தி அனைவரும் இணைந்து அரசைத் தோற்கடிப்பதற்குப் பதிலாக அனைவரும் இணைந்து கோவிட்டை தோற்கடிப்பதற்கு இணைந்து செயற்படவேண்டும். என்றாலும் எதிர்க்கட்சி கோவிட் நிலையையும் பொருட்படுத்தாது, மீண்டுமொரு கோவிட் அலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவது கவலைக்குரியது" என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US