சேதன உரத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் விவசாய செய்கைக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் - ரூபவதி கேதீஸ்வரன்
சேதன உரத்தைப் பயன்படுத்தி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய செய்கைக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று(28-10-2021) நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் கால போகச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது கடந்த போகங்களை விட வித்தியாசமான முறையில் அதாவது சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் இந்த பயிர் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் பிரதான தொழிலாகக் காணப்படுகின்றது.
ஆகவே கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரவைகளை அடையாளம் கண்டு அவற்றை எதிர்வரும் காலங்களில் அவற்றுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது சேதன விவசாய செய்கையை மேற்கொள்வதற்குக் கால்நடைகளின் தேவையும் ஒன்றாகக் காணப்படுகின்றமையால் கால்நடைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட
பிரதிநிதி, நீர்ப் பாசன பணிப்பாளர் மற்றும் இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர்
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விவசாய சார் திணைக்கள அதிகாரிகள் மாவட்ட
மேலதிக அரசாங்க அதிபர் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பிரதேச செயலாளர்கள் என பலர்
கலந்து கொண்டுள்ளனர்.



பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
