தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சுரேன் படகொட
அனைத்து தரப்பினரும் கூட்டு உடன்படிக்கைக்கு வந்து முட்டை மற்றும் கோழிப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வதன் மூலம் தொழில் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை தொழில் தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டத்தின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை கைத்தொழிலை ஏற்றுமதி தொழிலாக மாற்றுவதற்கு ஜனாதிபதியால் உத்தேசித்துள்ளதாகவும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தொழில்துறை முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரச்சினைகளுக்கான தீர்வு
கால்நடைத் தீவனப் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்துச் சிக்கல்கள், கால்நடைத் தீவனத்தை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி சிக்கல்கள் போன்றவை மற்றும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri