காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்:மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டுள்ள 9ஆம் திகதி (Live)
மே மாதம் நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் ஒரு போராட்டம் அல்லது நிகழ்வு நடத்தப்படுகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம்(09.12.2022) காலி முகத்திடலில் இரு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்து போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
இதற்கமைய வரிய குடும்பங்களில் இருக்கும் சிறுவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை காலிமுகத்திடலில் நடத்த வேண்டாம் என பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்து, இந்த நிகழ்வுகளை வேறு இடங்களில் நடத்துமாறு கூறியுள்ளனர்.







