ஐ.நாவுக்கான தமது தூதுவரை நியமித்த தலிபான்கள்! செய்திகளின் தொகுப்பு
ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவராக முகமது சுகைல் சாகீன் என்பவரைத் தலிபான் அரசு அறிவித்துள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆப்கானிஸ்தானின் முந்தைய பிரதிநிதிக்குப் பதில் புதிய பிரதிநிதியாக முகமது சுகைல் சாகீன் என்பவரைத் தலிபான் அரசு அறிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் நடைபெற்ற அமைதி பேச்சின் போது தலிபான்களின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,