யுத்தம் நிறைவு பெற்றாலும் இன்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள்(Video)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பிரதேசத்தில் இரு ஊடகவியலாளர்களுக்குத் தாக்குதல் நடத்தப்பட்டது.அதே போல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்குப் பின்னால் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த நாட்களில் பதிவானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்த்தபொழுது எமக்கும் தெளிவாக ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
2009 இல் யுத்தம் நிறைவு பெற்றாலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளர்களைப் பின்தொடர்ந்து செல்வது இன்னும் முடியவில்லை. சிலவேளை எமக்கு பதிவாகாத இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் இருக்கலாம்.
இதிலிருந்து நாம் ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த சம்பவங்கள் இன்னும் முடியவில்லை, அதாவது வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இன்னும் முடியவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
2009இல் யுத்தம் முடிந்ததுமே இந்த பிரச்சினைகளும் நிறைவு பெரும், அவர்களும் எங்களைப் போல் சுதந்திரமாக ஊடக வேளைகளில் ஈடுபட முடியும், அந்த உரிமை அவர்களுக்குக் கிடைக்கும் என நாம் நினைத்தோம்.
ஆனால் அவற்றுக்கு இன்னும் தடைகள் இருப்பது இந்த சம்பவங்களைப் பார்க்கும் போது தெரிகிறது. வடக்கைப் போன்றே, தெற்கிலும் ஊடகவியலாளர்களுக்கு இன்னும் பிரச்சினைகள் காணப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் உள்ளது.
ஆகவே ஒட்டுமொத்த சமூகமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.
அதே போல், வடக்கு ஊடகவியலாளர்களின் வாழ்க்கைக்கு உள்ள அச்சுறுத்தல்கள், அவர்களுடைய சேவைகளுக்கு ஏற்படுகின்ற தடைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.



