சஜித்தை ஆதரித்த பின்னரும் ரணிலுடன் கைகோர்த்த பிரதான கட்சியின் ஆதரவாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செய்னுல் அதீன் எஹியா உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத்தின் பொதுப் பிரதிநிதிகள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் 11 முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், நோர்வூட், அகரபத்தனை, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் 11 முன்னாள் உறுப்பினர்களே இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
ரணிலுக்கான ஆதரவு
முன்னதாக றிசாத் பதியுதீன், மற்றும் திகாம்பரம் உள்ளிட்ட கூட்டணியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த தரப்பின் முன்னாள் மற்றும் தற்போதைய இரண்டாம் மட்ட தலைவர்கள் ரணிலுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
