விடுதலையான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
2019ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கு கடலில் 196 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டு விடுவிக்கப்பட்ட மூன்று பேரை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் அமர்வு வழங்கிய விடுதலையை இரத்து செய்யக் கோரி, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, சிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஐவர் அடங்கிய அமர்வின் முன் இது தொடர்பான மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் ஆயிசா ஜினசேன, பிரதிவாதிகள் மூவரும் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயிசா ஜினசேன குறிப்பிட்டார் எனவே பொலிஸாருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam