இலங்கை குறித்து திருப்தி அடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நீதி அமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எவ்வித கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூதுக் குழு மற்றும் இலங்கை நீதியமைச்சுக்கு இடையிலான சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
நீதித்துறையில் தற்போதைய சட்ட சீர்திருத்தம், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடு அத்துடன் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகிய விடயங்கள் குறித்த, சாதகமான தன்மை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சாதகமாகப் பதிலளித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலை குறித்து அவர்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சாத்தியமான அனைத்து நிவாரணங்கள் தொடர்பிலும் பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட மனித விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் காரணமாக வரி செலுத்தாமல் ஐரோப்பியச் சந்தையில் பொருட்கள் விற்பனைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் நன்மையை இலங்கை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், மிக முக்கியமான நீதி அமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எவ்வித கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2021 ஜூன் 10, வியாழக்கிழமை இலங்கை தீங்கு விளைவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் குறித்து விசேட வனம் செலுத்தப்பட்டது.
இலங்கை இணக்கம் வெளியிட்ட, மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இடைநிறுத்துமாறு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த சிரேஷ்ட ஆலோசகர் நிகோலஸ் ஜைமிஸ்(Nicholas James), ஐரோப்பிய வெளி விவகார சேவை தெற்காசியப் பிரிவு தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபொலோஸ்(Geocarachus archiropolis), ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி வர்த்தக விருப்பத்தெரிவுகள் ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா(Guido Dolara), ஐரோப்பிய ஒன்றிய வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரிவுத் தலைவர் லூயிஸ் ப்ராட்ஸ்(Louis Pratz), இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய வெளி விவகார நடவடிக்கை சேவையின் அலுவலக அதிகாரி மோனிகா பைலெயிட்(Monica Pilot) மற்றும் ஐரோப்பிய வெளி விவகார நடவடிக்கை சேவை மனித உரிமைகள் கொள்கை அதிகாரி பவுலோ சல்வியா(Paulo Salvia) ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் இலங்கையின் மனித உரிமை பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
