டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த அடி! உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய பலம் வாய்ந்த நாடுகள்
உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
உதவி தொகை
உதவியாக வழங்கப்பட்ட 5,000 கோடியில் 3,500 கோடி ரூபாவை பிரித்தானியா வழங்கியதாக கூறப்படுகின்றது.
எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நோர்வே வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்பின் முயற்சி
மூன்று வருடங்களை கடந்தும் தொடர்ந்து வரும் உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவிகளை பிரித்தானியா தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
