ஐரோப்பிய நாடுகளின் மீது விதிக்கவிருந்த 10 சதவீத வரி இரத்து
கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் மீது விதிக்கவிருந்த 10 சதவீத வரியை ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டேவை சந்தித்த பிறகு, கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பாக ஒரு புதிய "ஒப்பந்தக் கட்டமைப்பு" (Framework) உருவாக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை கைப்பற்றும் இராணுவ பலம்
இந்த நிலையில்,கிரீன்லாந்தை கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதியளித்தார். "தாம் பலத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, பயன்படுத்தவும் மாட்டேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த அவர், அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு கவசமான "கோல்டன் டோம்" பற்றியும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை அடைந்த வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக ஒப்பந்தங்கள்
ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் உலக நாடுகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
அதேநேரம், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் தமக்கு நல்ல உறவு இருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஒரு "அற்புதமான மனிதர்" என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri