போப் பதினாறாம் பெனடிக்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையின் நெகிழ்ச்சியான நிமிடங்கள்
உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல் வைக்கப் பட்டுள்ள சைப்ரஸ் பெட்டி வத்திக்கான் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் PopeJohnXXIII மற்றும் PopeJohnPaul2 ஆகிய திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலே போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கில், புனிதர் இல்லம், வழிபாட்டு விழா அலுவலகம் மற்றும் சென் பீட்டரின் வத்திக்கான் அத்தியாயம் ஆகியவற்றின் முத்திரைகளுடன் திருத்தந்தையின் உடல் வைக்கப் பட்டுள்ள சைப்ரஸ் பெட்டி சுற்றி ஒரு கருவூலம் வைக்கப்பட்டு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் திகதி காலமானார்.
இவரது உடல் 5 நாட்களாக இத்தாலி அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று 16ம் பெனடிக்ட் இறுதி சடங்குகள் நடந்து முடிந்தது.
யார் இந்த பெனடிக்ட்
முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட். ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர் என்ற இயற்பெயர் கொண்டவர். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். 2005 ஏப்ரல் மாதம் 19ம் திகதி போப் ஆண்டவராக பதவியேற்றபோது அவர் தனது பெயரை 16ம் பெனடிக்ட் என மாற்றம் செய்து கொண்டார்.
2005ல் போப் ஆண்டவராக பதவியேற்ற 16ம் பெனடிக்ட் ஏறக்குறைய 8 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2013 பெப்ரவரி 28 ல் போப் பதவியை இராஜினாமா செய்தார்.
இவர் வயது முதிர்வால் உடல்நல பிரச்சினையை சந்தித்து வந்த நிலையில் போப் பதவியை துறந்தார். அதன்பிறகு அவர் வாத்திக்கான் நகரில் உள்ள மேட்டர் எக்லேசியா ஆலயத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.
பதவியை துறந்த பெனடிக்
95 வயது நிரம்பிய நிலையில் 16ம் பெனடிக்ட் வயது முதிர்வால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் முன்னாள் போப் 16ம் பெனடிக் உடல் நலக்குறைவால் டிசம்பர் 31ம் திகதி காலமானார்.
பொதுவாக போப் ஆண்டவராக இருப்பவர்கள் தங்களின் மரணம் வரை பதவியில் நீடிப்பார்கள். ஆனால் தற்போது காலமான 16ம் பெனடிக்ட் முன்கூட்டியே பதவியை 2013ல் துறந்தார். இவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிசடங்கு
மறைந்த 16ம் பெனடிக்ட் உடல் வத்திக்கான் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். 5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப் ஆண்டவர் 16ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வத்திக்கான் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது.
பாதிரியார்கள் பங்கேற்பு
அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு சுற்றி ஒரு கருவூலம் வைக்கப்பட்டு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த பெட்டிக்குள் போப்பாண்டவரின் சின்னம், அவரது உருவம் பொறித்த பதக்கங்கள் உள்ளிட்டவையும் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பாதிரியார்கள், ஆயர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.





