நினைவுத் தூபி இடிக்கப்பட்ட விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி கண்டனம்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான Nikolaj Villumsen கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழக நுழைவாயிலில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதனை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் வெகுவாக அவதானித்து வருவதுடன் தங்கள் எதிர்ப்பினையும் சமூகவலைத்தளம் மற்றும் செய்திகள் மூலமாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவர்களில்_ ஒருவரான Nikolaj Villumsen தனது எதிர்ப்பினை வலுவாக தெரிவுத்துள்ளார்.