ஈரான் மீது அழுத்தத்தை பிரயோகிக்க நாடுகளுடன் இணைந்து செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்
ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7 அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் வலயத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அந்த நாடு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை
குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு ஈரான் வழங்கி வரும் இராணுவ ஆதரவு மற்றும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நன்மைகளைப் பாதுகாக்கவும் தேவை ஏற்படின் மேலதிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.