கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 420கிலோ ஐஸ் போதைப்பொருள் : அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்
புதிய இணைப்பு
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டவல்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் கொழும்பு துறைமுகத்தில் இன்று(31.08.2026) திடீர்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 420 கிலோ எடை கொண்ட 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்கலனில் மறைத்து வைத்து
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 'ஐஸ்' வகை போதைப்பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.