பெருந்தோட்ட தொழிலாளர் வேதனப்பிரச்சனை! நாளை பணிப்புறக்கணிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர் வேதனப்பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தோட்டத் தொழிலாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை பணிகளை புறக்கணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வேதனப்பிரச்சனை தொடர்பாக தோட்ட நிறுவனங்களின் அணுகுமுறையை எதிர்த்து புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கோவிட் -19 பரவல் காரணமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் வீட்டிலேயே தங்கியிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளை தவிர்த்து இந்தப்பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கு 3000 கிலோ தேயிலை உற்பத்தி செய்வதாக செந்தில் தொண்டமான் கூறினார்,
ஆனால் தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், தற்போது ஒரு ஆண்டுக்கான உற்பத்தி 1000 கிலோ தேயிலையாக குறைந்துள்ளது என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
