தோட்ட முகாமையாளர் ஒருவரை தீயிட்டுக் கொளுத்திய நபர்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாப்பலகம குடமலான தோட்டத்தில் பழமை வாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதன் பின்னர் அந்த தோட்ட முகாமையாளரை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
முகாமையாளரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ வைத்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
