பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளில் தொடர்ச்சியான குறைப்புகளின் காரணமாக தற்போது பணவீக்கம் எதிர்மறையாகவே உள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் 2025 மார்ச் முதல் நிலைமைகள் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
பணவீக்கம்
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உள்ளூர் பொருளாதாரத்தில் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இலங்கை எச்சரிக்கையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்திரத்தன்மை
இதன்படி, விலை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் எழும் அபாயங்களுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, OPR என்ற ( overnight policy rate)கொள்கை விகிதத்தை 8.00வீதத்தில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கவனமாகக் கருத்தில் கொண்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், பணவீக்கம் 5வீதம் இலக்கை நோக்கி நகரும் என்பதை உறுதி செய்யும் என்றும் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
