பெருந்தோட்டப்பகுதியின் காணி சுவீகாிப்பு தொடர்பில், நாடாளுமன்றத்தில் கேள்வி
இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடா்பில் தமிழ் முற்போக்கு முன்னணி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாா் இந்த கேள்வியை எழுப்பினாா். அரசாங்கம், பதவிக்கு வந்தபோது பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசுக்காணிகளை அங்குள்ள இளைஞா்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பெருந்தோட்டத்துறையில் சுவீகாிக்கப்படும் காணிகள், பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக உதயகுமாா் குற்றம் சுமத்தினாா்.
இதேவேளை மலையக மக்கள், வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டாா்.
நாளாந்த வேதனமாக 1000 ரூபா அறிவிக்கப்பட்ட பின்னா் தொழிற்சங்க உாிமைகயும் மனித உாிமையும் மீறப்பட்டு வருவதாக அவா் குறிப்பிட்டாா்.
எனவே இதனை நிறுத்துவதற்கு தொழில் அமைச்சா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
இதற்கிடையில் தனியாா்துறையினாின் தொழில் ஓய்வுக்காலத்தை 60 வயதாக வரையறுப்பது தொடா்பான யோசனை சிறந்த யோசனை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினா் ராதாகிருஸ்ணன், பெருந்தோட்டத் தொழிலாளா்களின் ஊழியா் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும் வயதை மாத்திரம் 55 வயதாக திருத்தியமைக்கவேண்டு்ம் என்று கேட்டுக்கொண்டாா்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri