இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டம்! ஜெனீவாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் நடவடிக்கை
ஜெனீவாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும், 46-1 தீர்மானத்துக்கு இனங்க, 'இலங்கையின் பொறுப்புக்கூறல்' திட்டத்தை நிறுவியுள்ளது.
2021 மார்ச் 23 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற 46-1 தீர்மானத்தில், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை செய்வதன் முக்கியத்துவத்தை மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Sri Lanka accountability project என்ற பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியுள்ளார்.
இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தின் நிர்வாகம், ஜெனீவாவை தளமாகக்கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.