நாட்டில் கணிசமாக குறைந்துள்ள பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
நாட்டில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்தலி விலை 800 ரூபாயாக குறைந்துள்ள நிலையில், 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கொண்டைக்கடலை 600 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு அதிகரித்த வெங்காயத்தின் விலை, இந்த ஆண்டு 800 ரூபாவாக உயர்ந்தது. எனினும் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தை 200 முதல் 220 ரூபாய் வரை கொள்வனவு செய்ய முடியும்.
புதிய விலை
கடந்த ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 320 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 165 ரூபாயாக உள்ளது.
கடந்த காலத்தில் 600 ரூபாயாக உயர்ந்திருந்த டின் மீன் விலை இன்று 380 ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில், ஒரு முட்டையின் விலை 60 முதல் 65 ரூபாய் வரை இருந்தது. இன்று ஒரு முட்டையின் விலை 27 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
முன்னதாக கோழி விலை இறைச்சி விலை கிலோ ஒன்றுக்கு 1,600 ரூபாயாக இருந்தது. இன்று, ஒரு கிலோ கோழி இறைச்சி 900 முதல் 1,000 ரூபாயில் வரை கொள்வனவு செய்ய முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |