முடிவல்ல! தொடரும்! 2022 பண்டிகை காலத்திலும் பொருட்களின் விலை மேலும் உயரும்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது
நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்வரும் வாரத்தில் இணக்கம் எட்டப்படலாம் என சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (மார்ச் 12) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு ரொட்டி, அரிசி மற்றும் கறி பொதி, ஒரு கோப்பை சாதாரண தேநீர் மற்றும் வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.



