வலஸ் கட்டா பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல எடுத்த முயற்சி முறியடிப்பு
வெளிநாடு ஒன்றில் இருப்பதாக கூறப்படும், போதைப்பொருள் கடத்தல்காரர் கெஹல்பத்தர பத்மேவின், உதவியாளரான வலஸ் கட்டா என்ற திலின சம்பத், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச்செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயற்சி
முன்னதாக தடுப்புக்காவலில் வைத்து, சிறை அதிகாரி ஒருவர் அவருக்கு நோய்க்கான மருந்தைக் கொடுக்கத் தயாரான போது, அவர் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
'வலஸ் கட்டா' கடந்த சில நாட்களுக்கு முன்னரே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



