பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரச அதிகாரி ஒருவருக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதம்.. விடுதலைப் புலிகளை வைத்து பழிவாங்கும் செயல்
போராட்டத்திற்கு தயார்...
அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்வரும் 16.08.2025திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென ரவிகரன் எம்.பி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இதன்போது தெரிவித்தார்.
ரொட்விக்கோ என்ற அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மக்கள் மீது பொய்யான குற்றங்களைப் பதிவு செய்வதாகவும், மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் பொதுமக்கள் ரவிகரன் எம்.பியிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




