புதியதொரு திட்டத்துடன் தலைவர் பதவிக்கு வந்த எரான் விக்ரமரத்ன..!
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மாற்றத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்
தனது பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்த திட்டம்
இந்தக் குழுவிற்கு 'மறுசீரமைப்பு குழு' என்று பெயரிடப்பட்டிருப்பதே ஏதோ ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என அவர் குறிப்பிட்டார். கிரிக்கெட் விளையாட்டின் அரசியலமைப்பில் ஆரம்பித்து அடிமட்டத்திலுள்ள விடயங்கள் வரை பல மாற்றங்கள் அனைத்து நிலைகளிலும் நிகழ வேண்டும்.
நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்கள் குறித்து இப்போதே பேசப்போவதில்லை எனத் தெரிவித்த அவர், முதலாவதாகச் செய்ய வேண்டியது மற்றவர்களின் கருத்துக்களைக் செவிமடுப்பதே என்றார்.
ஏற்கனவே ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை.
முதலில் தற்போதுள்ள நிலைமைகளை ஆராய்ந்து, முகாமைத்துவத்துடனும் வெளியாரோடும் கலந்துரையாடி சிறந்ததொரு நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிக்கவுள்ளோம் என்றார்.
ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri