வெளியான Exit Poll கணிப்புகள்..! தவெகவுடன் அதிமுக கூட்டணி - அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் தமிழகம்
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக வெளியான எக்சிட் போல் (Exit Poll) கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
‘ஆக்சிஸ் மை இந்தியா’ வெளியிட்ட எக்சிட் போல் கணிப்புகளின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
தமிழக வெற்றிக்கழகம்
தவெக 98 முதல் 120 இடங்கள் வரை பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை பெறும் எனவும் அந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சுமார் 23% வாக்குகளை மட்டுமே பெறும் எனவும், தவெக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக தரப்பில் இருந்து தவெக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியாவிட்டால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் பதவிக்கான போட்டியில் விஜய்க்கு 37% மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 35% ஆதரவு கிடைத்துள்ளதாகவும் Exit Poll கூறுகிறது. இளைஞர் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தவெகவுடன் பேச்சுவார்த்தை
குறிப்பாக 18–19 வயதுடைய முதல் வாக்காளர்களில் 68% பேர் விஜய்க்கு வாக்களித்துள்ளதாகவும், 20–29 வயதுடையவர்களில் 59% பேர் அவரைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தவெக பல சமூகக் குழுக்களிடமும் ஆதரவு பெற்றுள்ளதாக Exit Poll கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தொங்கு சட்டசபை (Hung Assembly) உருவாகும் நிலை ஏற்பட்டால், விஜய் முக்கிய ‘கிங் மேக்கர்’ ஆக மாறக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில், அதிமுக தரப்பில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதுவரை பதிவான வாக்குப்பதிவு சுமார் 84.69% ஆகும். பெரும்பான்மை அமைக்க 118 இடங்கள் அவசியம் என்பதால், இறுதி முடிவுகள் அரசியல் சமநிலையை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this..
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan