ஊழியர் சேமலாப நிதியம் : நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்திற்கான (EPF) பணத்தை 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் வைப்புச் செய்யவில்லை என பிரதி தொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் பெறுமதி 36 பில்லியன் ரூபாய் என கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் அமைச்சுடன் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள்
நாடளாவிய ரீதியில் 22 ஆயித்து 450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நிதியைச் செலுத்தவில்லை.
தற்போது 36 பில்லியன் ரூபாய் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
டிஜிட்டல் அமைச்சுடன் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்கள் ஊடாக பெரும்பாலான விடயங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இதனடிப்படையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள், குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுமென பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
