ஈபிடிபி - தமிழரசின் சந்திப்பின் இரகசியம் - பின்னணியில் பெரும் புள்ளிகள்
இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு தமிழ் தேசிய அரசியலில் பல்வேறு வகையில் பேசுபொருளாகியுள்ளது.
குறித்த சந்திப்பின் பின்னர், தமிழரசு கட்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில், தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ. சுமந்திரன், குறித்த சந்திப்பு தொடர்பில் விளக்கியும் இருந்தார்.
இருந்த போதிலும் இந்த திடீர் கலந்துரையாடலின் பின்னணி குறித்து இன்னும் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறிருக்கையில், தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே சிவஞானத்திற்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சிறீதர் தியேட்டரில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு உண்மையில் எதை அடிப்படையாக கொண்டது என்பது கேள்விக்குறிய விடயம்.
எனவே, இவ்விடயத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்கின்றது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்ட பா.அரியநேத்திரன் மற்றும் கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் ஆகியோருடனான ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
