தமிழ் கட்சிகளிடம் அநுர அரசு விடுத்துள்ள வேண்டுகோள்!
"வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்." என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "மக்கள் ஆணையை மீறி எவரும் செயற்பட முடியாது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தமிழ்க் கட்சிகள் செயற்பட வேண்டும்.

எந்தச் சபையில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.
அதைவிடுத்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. அது மக்கள் ஆணைக்குச் செய்யும் துரோகம் ஆகும்."என தெரிவித்துள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri