பொதுமக்களுக்கு சலுகைகள் -நிவாரணங்களை வழங்கும் சூழல் உருவாகியுள்ளது! அமைச்சர் ஹந்துன்னெத்தி
அரசாங்கத்தின் சகல துறைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சலுகைகள் , நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவில் வருமானம்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைக்கு அரசாங்கத்தின் சகல துறைகளிலும் எதிர்பார்த்ததை விட அதிகளவில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இனியும் வரிகளை விதிக்கவோ அதிகரிக்கவோ தேவையில்லை.
அதற்குப் பதிலாக வரிகளை மனிதாபிமான முறையில் மறுசீரமைக்கலாம்.அதற்கான காலம் கனிந்துள்ளது.
அத்துடன் பொதுமக்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
