சஷீந்திர ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியல்
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படுவார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திககி நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்சவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.
அந்த சொத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு பலவந்தப்படுத்தியுள்ளதாக அவர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது 8,850,000 ரூபாயை (88 லட்சம்) இழப்பீடாக பெற்றதன் ஊடாக ஊழல் முறைகேடு தொடர்பில் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.





சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
