கொழும்பு புறநகர் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை: இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஹோமாகம – கட்டுவன பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி விபத்துக்குள்ளான இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் இன்று (19.08.2023) கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாதுகாப்பற்ற நிலைமை
தொழிற்சாலையை கண்காணிப்பதற்காக குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அப்பகுதியின் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மக்கள் முகக் கவசம் அணியுமாறு கூறப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட நட்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நான்கு தொழிற்சாலைகளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
