ஜனாதிபதி மாளிகையில் முதலில் நுழைந்தவர்களுக்குப் பிணை
கடந்த ஜூலை 09ம் திகதி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் நுழைந்த இரண்டு இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த இருவரும் கோட்டை நீதவான் திலிண கமகேயின் வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போது இருவரையும் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் இருவரும் ரத்தொளுகமை மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொஸ்வத்தை மகாநாம தேரர்
அதற்கிடையே கிருலப்பனையில் வைத்து கைது செய்யப்பட்ட போராட்டக்கள அங்கத்தவரான கொஸ்வத்தை மகாநாம தேரர் இன்று(05) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நேற்றைய தினம் அவர் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் ஸ்டாலினின் விளக்கமறியல் நீடிப்பு! நீதவான் திலிண கமகே உத்தரவு |