அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்: மு.கோமகன் வலியுறுத்து

Prisons in Sri Lanka Prison
By Kajinthan Aug 08, 2026 10:14 AM GMT
Report

சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்தார்.

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(8.8.2026) கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர்.இதன்போது கோமகனும் உடனிருந்தார்.

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது.அங்கே தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர்.

கைதிகளின் பாதுகாப்பு

அதேபோல வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்: மு.கோமகன் வலியுறுத்து | Ensure The Safety Of Political Prisoners Komahan

கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும் அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதிகள் வழங்தப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்! பொதுமக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்! பொதுமக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

தமிழ் மக்களது வாக்கு

இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்: மு.கோமகன் வலியுறுத்து | Ensure The Safety Of Political Prisoners Komahan

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை

வடக்கு - கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை

பிணை 

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும் சிறைக்குள் தான் இருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்: மு.கோமகன் வலியுறுத்து | Ensure The Safety Of Political Prisoners Komahan

அதில் இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம் மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள். எனவே அவர்கள் இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!

இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US