இன்சுலின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்
அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் அநாவசிய பயத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இன்சுலின் இருப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான இன்சுலின் இருப்பு உள்ளது.

மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், விநியோகஸ்தர்களின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தன.
இதை தவிர்க்க, பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri