அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழி அறிவிப்பு
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நடைமுறைப்படுத்தும் நிர்வாக உத்தரவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump), கையெழுத்திட்டுள்ளார்.
கூட்டாட்சி நிதியைப் பெறும் அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய இந்த உத்தரவு அனுமதிக்கிறது.
அதிகாரப்பூர்வ மொழி
அதாவது, இது, முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஆணையை இது இரத்து செய்கிறது, கிளிங்கடனின் உத்தரவு, கூட்டாட்சி நிதியைப் பெற்ற அரசாங்கமும், அமைப்புகளும் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்களுக்கு மொழி உதவியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக நிறுவுவது தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், பகிரப்பட்ட தேசிய மதிப்புகளை வலுப்படுத்தும், மேலும் மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்கும் என்று, ட்ரம்ப்பின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் பேசுவது பொருளாதார ரீதியாக கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், புதியவர்கள் தங்கள் சமூகங்களுடன் தொடர்பு கொள்ளவும், தேசிய மரபுகளில் பங்கேற்கவும் உதவுகிறது என்று ட்ரம்ப்பின் உத்தரவு கூறுகிறது.
ட்ரம்பின் உத்தரவு
அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று வாதிடும் ஒரு குழுவான யு.எஸ். ஆங்கிலத்தின் கூற்றுப்படி, 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்து சட்டங்களை இயற்றியுள்ளன.
பல தசாப்தங்களாக, காங்கிரஸ் உறுப்பினர்கள், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், புதிய நிர்வாகம் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழி பதிப்பை அகற்றியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
