குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க தயாராகும் இங்கிலாந்து பிரதமர்
சீனா - பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க இங்கிலாந்து பரிசீலனை செய்து வருகிறது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி 4 - 20ஆம் திகதி வரை சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, அடுத்த ஆண்டு (2022) அங்கு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சீனாவின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் பொருட்டு, இந்த குளிர்கால ஒலிம்பிக்கை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்படி குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்தால், அந்த நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்பார்கள். ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ, அமைச்சர்களோ பங்கேற்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.