சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சச்சின் டெண்டுல்காரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பர் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள அவரின் தற்போதைய சராசராசரியில் ஆட்டத்தை தொடர்ந்தால் இலகுவாக இந்த சாதனையை முறியடிப்பர் என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
15,921 ஓட்டங்கள்
''டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ஓட்டங்களை எடுத்தால் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும். ஜோ ரூட்டுக்கு 33 வயது.
10 முதல் 14 டெஸ்ட் போட்டிகள்
சுமார் 3,000 ஓட்டங்களில் அவர் பின்தங்கியுள்ளார். அவர் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து இது அமையும்.
அவர் ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், ஆண்டுக்கு 800 முதல் 1,000 எடுத்தால் ஜோ ரூட் இடத்தை அடைவதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மாத்திரமே இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுக்க அவருக்கு அதற்கான வயதும் உள்ளது." என தெரிவித்த்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
