கல்வி சான்றிதழை ஊடகங்களிடம் காண்பித்த அமைச்சர்
சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) குற்றப் புலனாய்வுத் துறையில் முறையிட்டுள்ளதோடு கல்விச்சான்றிதழையும் அவர் ஊடகங்களிடம் காண்பித்துள்ளார்.
தனக்கு கல்வித் தகுதி இல்லை என்றும், தாம் போலி தொழில்முறை நிபுணர் என்றும் ஊடகங்களில் கூறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான சான்றுகள்
இந்தநிலையில் போலியான குற்றங்களை சுமத்தி, அரசாங்க உறுப்பினர்களை அவமதிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி தற்போது நடந்து வருகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனையடுத்து தவறான தகவல் பிரசாரங்களுக்கு எதிராக தனது கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசியல்வாதிகளின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற தரவுத்தளத்தில் உள்ள சுமார் 30 அரசாங்க உறுப்பினர்களின் விபரங்களில் தவறான சான்றுகள் உட்பட தவறான தகவல்கள் இருப்பதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |