நேபாள தூதரகத்துக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறல்
நேபாள தூதரகத்துக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி நுழைந்து, அதனை சட்டவிரோதமாக அளந்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியன் வருஷ விதான உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு அளித்திருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள்
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



