மன்னாரில் இடம் பெற்ற வேலைவாய்ப்பு முகாம்
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பசுமை தொழில்நுட்ப கண்காட்சி ஆகியவை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (9) காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இதன் போது, மன்னார் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் அதே நேரம் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வேலைவாய்ப்பு முகாம்
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட தொழில் சந்தைக்கு வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்,அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதன் போது வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதே நேரம் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியது டன் விற்பனை நட வடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
