மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்ப நிலை

By Ashik Jul 09, 2025 01:49 PM GMT
Report

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை (9) மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில் சபையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று (9) காலை 10 மணியளவில் முதல் அமர்வு ஆரம்பமானது.

இதன் போது ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சபை அமர்வு ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கன்னி உரை இடம் பெற்றது. அதன் போது சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.

திருகோணமலையில் வெளிநாட்டவர் மீது தாக்குதல்: ஹோட்டல் சங்கத் தலைவர் கடும் கண்டனம்!

திருகோணமலையில் வெளிநாட்டவர் மீது தாக்குதல்: ஹோட்டல் சங்கத் தலைவர் கடும் கண்டனம்!

தவிசாளரினால் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பை வழங்க சபையில் தவிசாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் மன்னார் நகர சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பல உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்ப நிலை | Chaos At Maiden Session Mannar Urban Council

எனினும் இன்னும் ஒரு தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதீட்டை தங்களினால் ஏற்றுக் கொள்ள முடியாது என பல உறுப்பினர்கள் சபையில் தெரிவித்த நிலையில் சபையில் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில் சபையின் செயல்பாடுகள் தவிசாளரினால் அரை மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் சபையின் செயல்பாடுகள் இடம் பெற்ற போதும் நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொள்ள உறுப்பினர்கள் மறுத்தனர். இதனால் நீண்ட நேரம் சபையில் அமைதியின்மை இடம் பெற்றபோது சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மேலும் குறித்த பாதீடு குறித்து சபையின் செயலாளரின் கருத்துக்களை உறுப்பினர்கள் எதிர் பார்த்த போதும் செயலாளர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.இந்த நிலையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் செயலாளருக்கு எதிராக கருத்தை தெரிவித்தனர்.

தீரா மூட்டு வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..

தீரா மூட்டு வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..

கட்சிகளின் அதிருப்தி

இதனால் நீண்ட நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் குறித்த பாதீட்டை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அங்கீகரிக்க முடியாது என பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சபையினை முதல்வர் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைத்தார்.

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்ப நிலை | Chaos At Maiden Session Mannar Urban Council

இந்த நிலையில் சில உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளின் அதிருப்தி நிலை குறித்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

சபை அமர்வை ஒத்தி வைத்தது குறித்து நகர சபையின் முதல்வர் டானியல் வசந்திடம் வினவிய போது, மன்னார் நகர சபையின் தலைவர் உப தலைவர் தெரிவின் பின்னர் சபையின் முதல் அமர்வு இன்று புதன்கிழமை (9) காலை இடம்பெற்றது.

சபை அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது.நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சபை ஒன்று கூடியது. நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சபை நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது,முன்னை நாள் சபை உறுப்பினர்கள் சிலரினால் சபையை குழப்பும் வகையில் வருகை தந்து நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் பட்ட வகையில் அவர்கள் செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர்.இதன் போது புதிதாக பாதீட்டை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரிடம் காசோலை மோசடி செய்த நபர் கைது

ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரிடம் காசோலை மோசடி செய்த நபர் கைது

ஊழல், மோசடிகள் 

எனினும் மக்களினால் திட்டமிடப்பட்டு அதிகாரிகளினால் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட்டது.ஒவ்வொரு கிராமத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்களை மக்கள் ஊடாக தயாரிக்கப்பட்டு பாதீடு தயாரிக்கப்பட்டது.அதற்கு அமைவாக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்னும் அரைவாசி வேளைத் திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது.

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்ப நிலை | Chaos At Maiden Session Mannar Urban Council

அதனை காரணம் காட்டி சபை அமர்வை குழப்பும் வகையில் சபை தவிசாளரின் கட்டளைக்கு இணங்காமல் சபையை குழப்பும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள்.அதன் காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டது.

நகர சபையை பொறுப் பேற்றதன் பிற்பாடு நிறைய ஊழல் மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை வெளியில் கொண்டு வர முயற்சித்த போது குறித்த ஊழல் விடயங்கள் வெளியில் வந்து விடக் கூடாது என்பதற்காக இச் சபையை எவ்வாறாவது குழப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எனவே இவ்வாறானவர்களுக்கு மக்கள் தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சிஜடி என பொய் கூறி மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பில் சிஜடி என பொய் கூறி மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US