நாடாளுமன்றத்தில் உணவு பொருட்களை திருடும் ஊழியர்கள்
நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இறைச்சி, மீன், முட்டை மற்றும் கறுவாடு போன்ற உணவுகள் வெளியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசுக்கு வருடாந்தம் மிகப் பெரிய நஷ்டம்
இவ்வாறு உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதால், அரசுக்கு வருடாந்தம் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக சில ஊழியர்கள் அவற்றை தினமும் இரகசியமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் இது சம்பந்தமாக நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர். அண்மைய தினங்களில் வேக வைக்கப்பட்ட முட்டைகள் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சமைத்த உணவுகளுக்கு மேலதிகமாக உலர் உணவு பொருட்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
தமது பயண பொதிகளில் மறைத்து வைத்து இந்த உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவற்றை சரியான முறையில் பரிசோதனை செய்தால், இப்படியான மோசடிகளை தடுக்க முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்தும் உணவு பொருட்கள் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றன
இவ்வாறான மோசடிகளை தடுக்க நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க உட்பட உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவது சூட்சுமான முறையில் தொடர்ந்தும் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உணவகம் மற்றும் சமையல் அறையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால், இப்படியான மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இருந்து சூட்சுமான முறையில் உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவது தொடர்ந்தும் நடந்து வருவதை ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக தேடி அறிந்து தகவல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
