வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 12 நிமிட அகவணக்கத்துடன் உணர்வுபூர்வ அஞ்சலி
வலிகாமம் கிழக்குப் பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன.
சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச்சமயத்தில் பிரசன்னமாகியிருந்த பிரதேசசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், போர் முடிவுறுத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைகின்ற போதும் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கு நீதி கிட்டவில்லை என்பதை நினைவு கூர்ந்து 12 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
அக வணக்கத்தினைத் தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். பிரதேச சபை வளாகத்தில் உள்ள நினைவேந்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள.
இடம் சிவப்பு
மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்
வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
