கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மாலை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்வேறு இடங்களிலும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.



கிளிநொச்சி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்கள் வருடம்தோறும் மே மாதம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகின்றனர்.
இதனடிப்படையில் சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இவ்வருடம் நினைவேந்தல் நிகழ்வானது முன்னாள் போராளி கண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் லோறன்ஸ் பொதுச் சுடரினை ஏற்றி வைக்க ஏனையவர்களும் சுடர்களை ஏற்றி நினைவு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்துள்ளனர்.









மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri