எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்! பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனம் சனிக்கிழமை (07) பிற்பகல் முதல் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் விமானங்களுக்கான முன்பதிவுகளை உறுதிப்படுத்திய பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்லலாம் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்
இதில் டுபாய் பயணிக்கும் பயணிகளும் அடங்குவர் எனவும், பயணிகள் தங்களது விமானங்களுக்கான விமான அட்டவணையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும் http://emirat.es/nowoperating அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை மாற்றம்
எமிரேட்ஸ் நிறுவனம் மோதல் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பயணிகளின் புரிதலுக்கும் பொறுமைக்கும் எமிரேட்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், தேவைப்பட்டால் அதன் செயல்பாட்டு அட்டவணையை மாற்றியமைக்கப்படலாம் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் நுழைந்த இரண்டு ஈரானிய கப்பல்களால் குழப்பத்தில் அரசாங்கம்! களமிறங்கியுள்ள புலனாய்வு அதிகாரிகள்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri