ICC மகளிர் வளர்ந்து வரும் நாடுகள் கிண்ணம்: இலங்கைக்கு தொடர்ந்து நான்காவது வெற்றி
ICC மகளிர் வளர்ந்து வரும் நாடுகள் கிண்ணத்தொடரில் இலங்கை அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்து, குழு A புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை ஐந்து விக்கெட்டுகளால் இலங்கை வீழ்த்தியது.
அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு
முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை சார்பில் கவிஷா தில்ஹாரி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நிமாஷா மீபகே 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
விஷ்மி குணரத்னே ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கௌஷினி நுத்யங்கன 25 ஓட்டங்களையும் பெற்றார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் குழு A இல் முதலிடத்தில் உள்ளது. ஏனைய போட்டிகளில் நெதர்லாந்து: பங்களாதேஷை 5 விக்கெட்டுகளால் வென்றது.
ஸ்டெரே காலிஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றார்.பாகிஸ்தான்: சிம்பாப்வேயை 51 ஓட்டங்களால் வென்றது. முனீபா அலி 51 ஓட்டங்களைப் பெற்றார்.
அயர்லாந்து: பப்புவா நியூ கினியாவை 45 ஓட்டங்களால் வென்றது. கபி லூயிஸ் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
புள்ளிப்பட்டியல் நிலவரப்படி,
குழு A யில் – இலங்கை 8 புள்ளிகளுடன் முதலிடம்.வகிக்கிறது குழு யில் – பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து தலா 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.
இலங்கை மகளிர் அணி தனது அபார வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, தொடரின் அடுத்த கட்டத்திற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.