நோர்வே தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
இலங்கைக்கான நோர்வே தூதரகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நோர்வேயில் இலவச புலமைப் பரிசில் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் ஓர் பொய்யான தகவல் என தெரிவித்துள்ளது.
நோர்வேயில் புலமைப் பரிசில் கற்கை நெறிகளை மேற்கொள்ள விரும்புவோர் நாட்டின் பல்கலைக்கழகங்களின் அதிகாரபூர்வ இணைய தளங்களில் இது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது.
உங்களது தனிப்பட்ட விபரங்களை மூன்றாம் தரப்பு இணைய தளமொன்றுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தூதரகம் கோரியுள்ளது.
மூன்றாம் தரப்பு ஒன்றிடம் எந்தவிதமான பணக் கொடுப்பனவுகளையும் செய்ய வேண்டாம் எனவும் நோர்வே தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் எவரும் சிக்கிவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நோர்வே தூதரகத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri