பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை
பிரித்தானியர்களுக்கு அவசர பயண எச்சரிக்கை ஒன்று விடுக்கபட்டுள்ளது.
ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும் பிரித்தானியர்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி, ஸ்பெயினில் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.
இதனால் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும் பிரித்தானியர்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என Jet2 விமான நிறுவனம் எச்சரித்துள்ளது.
பயண இடையூறுகள்
மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக அடுத்த மாதம் முழுவதுமே தொடர்ந்து பயண இடையூறுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பயணம் புறப்படுவோர் அவ்வப்போது தங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை கவனித்து அதற்கேற்ப முடிவெடுத்துக்கொள்ளுமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
