துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை விடுத்துள்ளது.
குறித்த அறிவித்தலில் மேலும்,
எமது நாட்டில் கோவிட் தற்சமயம் வேகமாக பரவுகின்றமை யாவரும் அறிந்த விடயம். தற்போது எமது பிரதேசத்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே சகல விழாக்கள், நிகழ்வுகள் ஒன்று கூடல்கள், தனியார் வகுப்புகள் மற்றும் சமய ஆராதனைகளை உடனடியாக நிறுத்துவதுடன் சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்குமாறும் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வைத்தியசாலையில் பணியாற்றும்
கொல்லவிளாங்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, கொழும்பில் மேசன் வேலைக்கு சென்று திரும்பிய
ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவருக்கும் கோவிட் தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan